சென்னை: நம்நாட்டில் இளநிலை பட்டப் படிப்புக்கு 3 ஆண்டு, பிஎட் படிப்புக்கு 2 ஆண்டு என மொத்தம் 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். இதற்கு மாற்றாக தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பை தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்சிஇடி) கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த 4 ஆண்டு பிஎட் படிப்பை தொடர உயர்கல்வி நிறுவனங்களுக்கு என்சிடிஇ சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. எனினும், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் 2 ஆண்டு பிஎட் படிப்பை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் 2024-25-ம் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு சிறப்பு பிஎட் படிப்புக்கான புதிய அனுமதி வழங்கப்படாது என்று இந்திய மறுவாழ்வு குழுமம் (ஆர்சிஐ) அறிவித்தது.
இதுகுறித்து அதன்உறுப்பினர் செயலர் விகாஸ் திரிவேதி வெளியிட்ட அறிவிப்பு; ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎட் படிப்பை என்சிஇடி கடந்த கல்வியாண்டு அறிமுகம் செய்தது. அதையேற்று 2024-25-ம் முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 2 ஆண்டு சிறப்பு பிஎட் படிப்புக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 ஆண்டு பிஎட் படிப்புக்கான பயிற்சி பாடங்கள் வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago