வேலைக்கு நான் தயார் - 25: ஆடை வடிவமைப்பாளராக விருப்பமா?

By இரா.நடராஜன்

எனது மகள் பிளஸ் 1 படிக்கிறாள். அவளுக்கு பேஷன் டிசைனராக வேண்டுமென்கிற ஆசை. இத்துறையை கற்றுத் தரும் நல்ல கல்லூரிகளை தெரிவிக்கவும். - நா.குமரேசன், புளியம்பட்டி, ஈரோடு.

பேஷன் டிசைனிங் குறித்துபல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதனை நான்கு வருட படிப்பாகவும், மூன்று வருட பி.எஸ்சி.படிப்பாகவும் படிக்கலாம். மத்திய அரசின் கல்வி நிறுவனம் முதல் தனியார் கல்லூரிகள் வரை இதனைவழங்குகின்றன. இன்றைய இளைஞர்கள் இப்படிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். உங்களுக்காக ஒரு சில படிப்புகள்.

1. பி.டெக். பேஷன் டிசைன் / டெக்னாலஜி.

2. பி.எஸ்சி. பேஷன் டெக்னாலஜி.

3. பி.எஸ்சி.அப்பேரல் சயின்ஸ்.

4. பி.எஸ்சி. பேஷன் டிசைன்

5. பி.எஸ்சி. காஸ்ட்டியூம் டிசைன்

6. பி.டெஸ். ஜுவல்லரி டிசைன்.

7. பி.டெஸ். லெதர் கூட்ஸ் அண்டு அக்சஸரி டிசைன்

8. பி.டெஸ். பேஷன் கம்யுனிகேஷ்ன்

9. பி.எஸ்சி. கார்மென்ட் மேனுபாக்சரிங்

10. பி.டெஸ் - நிட்வேர் டிசைன்

11. பி.எஸ்சி. - பேஷன் கம்யுனிகேஷன்

உங்களுக்கு ஆர்வம் இருப்பின் மத்திய அரசின் நிப்ட் (NIFT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டிசைன் கல்வி நிறுவனம் நாடு முழுவதும் 18 இடங்களில் உள்ளது. தமிழகத்தில் சென்னை தரமணியில் உள்ளது. இதற்கென தனியே நுழைவுத் தேர்வு உள்ளது. இது உங்களின் முதல் இலக்காக இருக்க வேண்டும். இல்லையெனில் தனியார் கல்லூரிகளிலும் பி.எஸ்சி. படிப்பினை படிக்கலாம். மேலும் ஆயத்த ஆடைவடிவமைப்பினை பி.எஸ்சி. படிப்பாகவும் மத்திய அரசின் ஆயத்த ஆடை வடிவமைப்பு மையங்களில் படிக்கலாம்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்

- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE