சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிப்பதற்காக சென்னை ஐஐடி மற்றும்அண்ணா பல்கலை.யுடன், பிஎஸ்என்எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் இணைந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் திறன்சார் கல்வி குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மற்றும் பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன் குமார் புர்வார் ஆகியோர் நேற்றுகையெழுத்திட்டனர். சென்னை கிண்டியில் உள்ளபல்கலை. வளாகத்தில் இந்நிகழ்வுநடைபெற்றது.
இதன்மூலம் மாணவர்களுக்கு தகவல் தொடர்பு உட்பட துறைகளில் நவீன தொழில்நுட்பம் சார்ந்த திறன் பயிற்சிகள் 6 மாதம்முதல் 2 ஆண்டுகள் வரை அளித்து, சான்றிதழ்கள் தரப்படும். இதுதொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் கற்றுதரப்பட உள்ளன. இதன்மூலம் தகவல்தொடர்பு துறை மாணவர்களின் திறன் மேம்படும். அடுத்த 10 ஆண்டுகளில் 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் இருக்கும்.
மேலும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியை காணலாம். இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்துவதற்கு பிஎஸ்என்எல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த முயற்சி முழுமை பெற்றால் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும், அண்ணா பல்கலை. வளாகம் ‘வைஃபை’ வசதி கொண்டதாக மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன் குமார் புர்வார் கூறும்போது, ‘‘இன்றைய இளைஞர்கள் படிப்பது மட்டுமின்றி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.அதன் மூலமே புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும். கிராமங்களுக்கு இடையே தகவல்தொடர்பை ஏற்படுத்த மத்திய அரசு சமீபத்தில் ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளது. இதற்காக கிராமம்தோறும் வைஃபை இணைப்புதர முடிவானது. அதன்படி 6 லட்சம்கிராமங்களில் வைஃபை வசதியைபிஎஸ்என்எல் நடைமுறைபடுத்தியுள்ளது. இந்த பயிற்சி மூலமாக அதிகமாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அண்ணா பல்கலை. கூடுதல் பதிவாளர் எஸ்.மூர்த்தி பாபு,பேராசிரியர் எம்.மீனாட்சி மற்றும்பிஎஸ்என்எல் நிறுவன உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்களுக்கு பட்டயப் படிப்புகளாக திறன் பயிற்சி அளிப்பதற்காகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன் குமார் புர்வார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago