திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை மாணவர்களுக்கு இளங்கலை படிப்புக்கான கேள்விகளால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

வேலூர்: திருவள்ளுவர் பல்கலை.யில் முதுகலை கணிதத் துறையின் கணித அறிவியல் கேள்வித்தாளில், இளங்கலை படிப்புக்கான கேள்விகள் இடம் பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

வேலூர் அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலை.யின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பல்கலை. சார்பில் நடைபெற்று வரும்பருவத்தேர்வுகளில் கேள்வித்தாள் குளறுபடி, முடிவுகள் வெளியாவதில் தாமதம் என சர்ச்சைகள் எழுந்தன. அண்மையில் முடிந்த பருவத்தேர்வில் பழைய கேள்வித்தாள் கேட்கப்பட்டதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 8-ம் தேதி நடைபெற்ற முதுகலை இரண்டாமாண்டு கணித தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கணித அறிவியல் கேள்வித்தாளில் (Programing c ), இளங்கலை கணித அறிவியல் படிப்பில் கேட்கப்படும் (Programing-c) கேள்விகளே அதிகம் இடம் பெற்றிருந்தன. இதற்கிடையில், இந்த விடைத்தாள்களைத் திருத்த கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வரும் 27-ம் தேதி மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘சர்ச்சைக்குரிய கேள்வித்தாளில் 75 மதிப்பெண்ணில் 58 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இளங்கலை பாடங்களிலிருந்து கேட்கப்பட்டதுடன், அந்தக் கேள்விகள் பாடங்களைத் தாண்டி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விகளுக்கு ஏதாவது எழுதினாலே, 58 மதிப்பெண் கொடுத்தே தீர வேண்டும். இது நன்கு படித்துவிட்டு, தேர்வெழுத வரும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாராவது ஒரு மாணவர் நீதிமன்றம் சென்றாலும், அனைவரும் சிக்க வேண்டிவரும் என்பதால் ஆசிரியர்கள் பலரும் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தினர். வேறு வழியின்றி வரும் 27-ம் தேதி மறுதேர்வு நடத்த தயாராகி வருகின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து பல்கலை. நிர்வாகம் தரப்பில் விசாரித்தபோது,‘‘50 சதவீதத்துக்கும் அதிகமானகேள்விகள் வெளி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டதால் மறுதேர்வு நடத்த உள்ளோம். இப்படி நடப்பது சாதாரணமானதுதான்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்