சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள 8 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகட்டுப்பாட்டு அலுவலகம் அறி வித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இன்னும்இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மின் விநி யோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாடப்புத்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
பல மாணவர்களின் வீடுகளும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன என்று கல்லூரிகள் தெரிவித்துள்ளன. இதை கருத்தில்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி-திருச்செந்தூர், அண்ணா பல்கலைக் கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி உள்பட 7 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 30-ம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago