சென்னை: தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக சென்னை ஐஐடி மற்றும் மும்பை ஐஐடி ஆகியவற்றுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க FedEx நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''FedEx Corp. (NYSE: FDX) இன் துணை நிறுவனமும், உலகின் மிகப்பெரிய அதிவேக டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான FedEx Express (FedEx), இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களான ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், திறமையை பயன்படுத்துதல் , நிலைத்தன்மை, தொடக்க நிறுவன வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் FedEx இன் பொறுப்புணர்வை இந்த கூட்டுமுயற்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு ஐஐடி வளாகங்களிலும் உலகளவில் அங்கீகரிக்கப்படும் 'உயர் சிறப்பு மையத்தை' உரிய உள்கட்டமைப்பு வசதிகளோடு அமைக்க இந்த முன்முயற்சி தனது பங்களிப்பை வழங்கும். ஆற்றல்மிக்க திறமையான நபர்களை ஊக்கப்படுத்துவதுடன் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பணிகளை தீவிரப்படுத்துதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை திட்டங்களுக்கு உதவுதல், சுற்றுச்சூழலை தீவிரமாக ஊக்குவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இந்த உயர்சிறப்பு மையம் முன்னிலை வகிக்கும்.
இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த FedEx கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜ் சுப்ரமணியம், "விநியோகச் சங்கிலிகளை அனைவருக்கும் உகந்த வகையில் சிறப்புடையதாக மாற்ற FedEx-ஐச் சேர்ந்த நாங்கள் விரும்புகிறோம். போக்குவரத்து சூழலை மாற்றியமைப்பதைத் தாண்டி, நமது சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உறுதிபூண்டிருக்கிறோம். இந்த இலக்குகளை அடையும் வகையில் இந்த மதிப்புமிக்க நிறுவனங்களுடன் எங்களது ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.
» “என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி சதி” - கேரள ஆளுநர் ஆரிஃப் கான் குற்றச்சாட்டு
» மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை
மும்பை ஐஐடி-யின் இயக்குநரான பேராசிரியர் சுபாசிஸ் சௌத்ரி, “அளவிடக்கூடிய மற்றும் எதிர்கால தீர்வுகளை மேம்படுத்தவும், தொழில் முன்னேற்றத்தை எளிதாக்கும் விதமாக தேசிய மற்றும் உலகளவிலான பெரும் சவால்களை தீர்க்கக்கூடிய இளமையான தகுதியுடைய திறமைசாலிகளை உருவாக்க ஆதரவளிக்கும் வகையில் தொழில்துறையினருடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு மும் ஐஐடி உறுதிபூண்டுள்ளது. FedEx உடனான எங்களது ஒத்துழைப்பு அதிநவீன டெலிவரி வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் குறிப்பிடத்தக்க படியாகும். விநியோகச் சங்கிலிகளின் டிஜிட்டல் மாற்றம், டிஜிட்டல் இரட்டையர்களின் ஒருங்கிணைப்பு போன்ற மிக முக்கியமான சில சவால்களை எதிர்கொள்ளும் இந்த முயற்சிகள் நீண்ட தொலைவுக்கு ஆழமான தாக்கத்தை உருவாக்கும்" என்று கூறினார்.
சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “தொழில்நுட்பத்தையும் திறமையையும் ஒன்றிணைத்து நீடித்த போக்குவரத்தை இயக்குவதற்கான மையத்தை FedEx உடன் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். செயல்பாட்டு ஆராய்ச்சி மற்றும் நெட்வொர்க் திட்டமிடல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, செயல்திறன் அதிகரிப்பு, மூலோபாயத் திட்டமிடல் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நீடித்த தளவாடப் போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களுடன் FedEx Express மேற்கொண்டிருக்கும் இந்த கூட்டுமுயற்சியானது, தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் திறமைமிக்க குழுவினரையும் ஒருங்கிணைத்து, போக்குவரத்துத் தொழில் தரத்தை மறுவரையறை செய்ய தயாராகும் வகையில் அமைந்துள்ளது. புதுமை மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவின் தடையற்ற ஒருங்கிணைப்பு மூலம் எல்லைகளைக் கடந்த போக்குவரத்து சிக்கல்களை சரிசெய்வதில் கவனம் செலுத்தப்படும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago