சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி புதன்கிழமைக்கும், புதன்கிழமை டிச.6-ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமைக்கும் (டிச.7) மாற்றியைமைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அறிவிக்க எண் 34/2022-ல் அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான, நேர்முகத் தேர்வினை கடந்த 22.11.2023 முதல் நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் (4.11.2023 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 6.11.2023 முற்பகல்) உள்ள நிலையில், தமிழக அரசு மிக்ஜாம் (MICHAUNG) புயல் காரணமாக வரும் திங்கட்கிழமை (டிச.4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு , பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நாளில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக வாசிக்க > மிக்ஜாம் புயல் | சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பொது விடுமுறை
வரும் திங்கள்கிழமை (டிச.4) பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு வரும் டிச.6ம் தேதி புதன்கிழமைக்கும், புதன் கிழமை டிச.6ம் தேதியன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு வியாழக்கிழமைக்கும் (டிச.7) மாற்றியைமைக்கப்பட்டுள்ளது.
எனவே, திங்கட்கிழமை (டிச.4) அன்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வாளர்கள் அனைவரும் வரும் புதன்கிழமை (டிச.6) அன்று மாற்றியமைப்பட்டுள்ள நேர்முகத்தேர்விலும், புதன்கிழமை (டிச.6) அன்று நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த தேர்வர்கள் அனைவரும் வியாழக்கிழமை (டிச.7) அன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நாளில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago