ஆட்டோமேஷன் தயாரிப்புகளில் முக்கியப் பங்கு - ‘மெக்கட்ரானிக்ஸ்’ படிப்பும், சில புரிதல்களும்!

By Guest Author

எல்லாப் பொறியியல் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பொறியியல் படிப்பு இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் மெக்கட்ரானிக்ஸ். யஸ்கவா என்கிற ஜப்பானிய நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் டெட்சுரோ மோரி என்பவரால் 1969ஆம் ஆண்டு ‘மெக்கட்ரானிக்ஸ்’ என்கிற வார்த்தை உருவாக்கப்பட்டது. மெக்கட்ரானிக்ஸ் என்பது மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டு பொறியியல் பிரிவுகள் இணைந்த துறை. அத்துடன் கணினிப் பொறியியல், மென்பொருள் பொறியியல், கட்டுப்பாட்டுப் பொறியியல், அமைப்பை வடிவமைக்கும் பொறியியல் போன்ற இதர பிரிவுகளும் அதில் அடங்கியுள்ளன. பொறியியல் பிரிவுகளின் எல்லைகளைத் தகர்த்து, அவற்றை ஒன்றிணைத்து, பொறியியலை ஒரே பிரிவாக மெக்கட்ரானிக்ஸ் மாற்றியுள்ளது எனலாம்.

காலத்தின் தேவை: இன்றைய நவீன யுகத்தில், மக்களின் பயன்பாட்டில் இருக்கும் எல்லாச் சாதனங்களும் அறிவியலின் அசாத்திய கண்டுபிடிப்புகளும் தனிப்பட்ட ஒரு பொறியியல் பிரிவை மட்டும் சார்ந்தவையாக இல்லை. பலதரப்பட்ட பொறியியல் பிரிவுகளின் ஒத்திசைவால், அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இடையிலான இணக்கத்தால் அவை உருவாக்கப்படுகின்றன. இந்தத் தேவையிலிருந்து உருவானதே மெக்கட்ரானிக்ஸ். மெக்கட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்துக்குச் சிறந்த உதாரணமாக நம்முடைய வீட்டிலிருக்கும் சலவை இயந்திரத்தையோ தொழிற்சாலையிலிருக்கும் சி.என்.சி. இயந்திரத்தையோ கூறலாம்.

மெக்கட்ரானிக்ஸ் சிறப்பு: எந்தவொரு பொறியியல் பிரிவாக இருந்தாலும், வடிவமைப்பே அதன் தொடக்கப் புள்ளி. பல்வேறு பொறியியல் பிரிவுகளைச் சார்ந்திருக்கும் இன்றைய கண்டுபிடிப்புகளின் வடிவமைப்புக்கு, எல்லாப் பொறியியல் பிரிவுகளையும் ஒரே நேரத்தில் அணுகும் போக்குத் தேவை. அதற்கு எல்லாப் பொறியியல் பிரிவுகளையும் குறித்த அறிவும் தெளிவும் தேவை. இந்தத் தேவையை மெக்கட்ரானிக்ஸ் படிப்பு பூர்த்திசெய்கிறது.

ஒரு சிக்கலான கண்டுபிடிப்பில், பல்வேறு பொறியியல் பிரிவுகளுக்கு இடையிலான இணைப்புகளையும், அந்த இணைப்புகளைத் தேவைக்கு ஏற்ப கட்டுப்படுத்தும் திறனையும் மெக்கட்ரானிக்ஸ் பொறியியலாளர்கள் கொண்டுள்ளனர். ஒரு கண்டுபிடிப்பில் உள்ள குறைகளை முன்கூட்டியே அறிவதற்கும், தேவைப்பட்டால் வடிவமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் விரைவான தயாரிப்புக்கும் இத்தகைய திறன் உதவுகிறது.

ரோபாட்டிக்ஸ் வேறு: ரோபாட்டிக்ஸ் படிப்பைப் போன்றே மெக்கட்ரானிஸ் உள்ளதே என்று தோன்றலாம். தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தேவைகளின் அடிப்படைகளில் உருவான பொறியியல் பிரிவு மெக்கட்ரானிக்ஸ். ரோபாட்டிக்ஸ் என்பது, மனிதனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து எந்நேரமும் செயலாற்றத் தயாராக இருக்கும் இயந்திரங்கள் குறித்த புனைவுகளின் உந்துதலால் ஏற்பட்டது.

மெக்கட்ரானிகஸ் பிரிவின் பல்வேறு கூறுகளையும் ரோபாட்கள் கொண்டிருப்பதால், ரோபாட்டிக்ஸை மெக்காட்ரானிக்ஸ் அமைப்பின் அங்கமாகக் கருதலாம். இருப்பினும் மெக்காட்ரானிக்ஸ் உடன் ஒப்பிடும்போது ரோபாட்டிக்ஸில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளும் ஆய்வறிக்கைகளும் முதிர்ச்சியடைந்தவையாக உள்ளன.

ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதில் அங்கமாக இருக்கும் பல்வேறு பிரிவுகள், அவற்றுக்கு இடையிலான தொடர்புகள், ஒத்திசைவுகள் ஆகியவற்றை உணர்ந்து அறியும் திறன் மெக்கட்ரானிக்ஸ் பொறியாளர்களுக்கு உண்டு. இதனால்தான், அடுத்த தலைமுறை ஆட்டோமேஷன் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கை அவர்கள் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆர்.செந்தில்நாதன் | இந்து பிசினஸ் லைனில் வெளியான கட்டுரையின் சுருக்கம் | தமிழாக்கம்: நிஷா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

12 days ago

கல்வி

13 days ago

கல்வி

13 days ago

மேலும்