புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2 பேர், மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 33 வகையான போட்டிகளை உள்ளடக்கிய கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வேலூரில் அண்மையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் ஆர்.தர்ஷனா- செவ்வியல் நடனத்திலும், என்.தனவர்த்தனா- தோல் இசைக் கருவி இசைக்கும் போட்டியிலும் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago