சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர், ஓவியர்கள் பங்கேற்க அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சங்க இலக்கிய பாடல்களை ஓவியங்களாக வரையும் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் பங்கேற்கலாம் என தமிழ் இணைய கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் இணைய கல்விக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் சங்கஇலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு “சங்க இலக்கிய ஓவியப் போட்டியை” தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்துகிறது.

இப்போட்டியில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் ‘ www.tamilvu.org’ என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து 10 நாட்களுக்குள் ‘www.tamilvu.org’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். இதில் ஒரு பாடலை 5 பேர் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இந்தப் போட்டிக்கான இணைப்பு நவ. 27 வரை செயல்பாட்டில் இருக்கும்.

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25 என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு டிச.9-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவியங்களுக்குத் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என 3 பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9ஆயிரம் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு ‘இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை – 25 என்ற முகவரியிலோ 044 - 2220 9400, 86678 22210 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்