சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சிக்கு இன்று (நவம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு பதிவுசெய்ய ஆகஸ்ட் 10 முதல் 21-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. தற்போது தேர்வர்களின் நலன் கருதி செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்ய மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதையடுத்து அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (நவம்பர் 6) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நேரில்சென்று தங்களின் பெயரை பதிவுசெய்து கொள்ள வேண்டும். அப்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு எழுத்துத் தேர்வுக்கான பதிவு தொடங்கும்போது தனித்தேர்வர்கள் இந்த ஒப்புகைச்சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில்உள்ள விண்ணப்ப எண்ணைபயன்படுத்தியே ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago