`என்எல்சி இந்தியா' நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விநாடி-வினா போட்டி: அக். 26-ம் தேதிக்குள் பதிவுசெய்ய பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் சார்பில்,பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி நடைபெறுகிறது. இதில், அரசு மற்றும்தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஊழல் வேண்டாம் என்று சொல்வோம்; தேசத்துக்கு அர்ப்பணிப்புடன் இருப்போம்’ என்பதை நோக்கமாகக் கொண்டு, ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2023’ வரும் 30 முதல் நவம்பர் 5-ம் வரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, இந்திய அரசின்பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் இணைந்து, பள்ளி மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு ‘ஊழல் வேண்டாம் என்று சொல்வோம்; தேசத்துக்கு அர்ப்பணிப்புடன் இருப்போம்’ என்ற கருப்பொருளில், ஊழல் எதிர்ப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ, மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெய்வேலி என 5 மண்டலங்களில் போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் வரும் 26-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

போட்டியில் பங்கேற்க...: இந்தப் போட்டியில் பங்கேற்க https://www.htamil.org/nlcquiz2023 என்ற ஆன்லைன் லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவுசெய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

17 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்