சேலம்: உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, இளைஞர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஒரே நேரத்தில் 6,600 பேர் கடிதம் எழுதி தபால் பெட்டியில் சேர்த்த நிகழ்ச்சி நடந்தது.
உலகில் இடப்பெயர்ச்சியால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் மட்டுமன்றி, பலதரப்பட்ட அனுபவங்களையும், பரந்தப்பட்ட அறிவையும் மனிதர்கள் பெற்று வருகின்றனர். உணவு பொருட்களில் தன்னிறைவு காண வேண்டுமெனில், பொருட்களின் இடப்பெயர்ச்சி அவசியம். அதேபோல, வேலை விஷயமாகவும், தொழில் ரீதியாக பலரும் பல இடங்களில் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் வசிக்க வேண்டிய நவீன யுகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்ள தொலைபேசி, இணைய வசதியில்லாத காலத்தில், தபால் மட்டுமே கோலாட்சி செய்து வந்தது. தொலைதூர உறவுகளிடம் இருந்து வரும் கடிதத்தை ஒட்டுமொத்த குடும்பமும் ஆர்வமுடன் எதிர்பார்த்த காலம் உண்டு. ஆனால், இப்போதோ, தொட்டதற்கெல்லாம் தொலைபேசி, எடுத்ததற்கெல்லாம் இணைய வசதி, நினைத்தால் குறுந்தகவல், பார்க்க நினைத்தால் வாட்ஸ்அப் வீடியோ கால் என உள்ளங்கையில் ஒட்டு மொத்த உலகமும் அடக்கி வைத்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது.
அஞ்சலகங்களில் காத்திருந்து பொங்கல், தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பிய காலம் மறைந்ததால், தற்போது, கடிதங்கள் எழுதும் முறையை வளரும் தலைமுறை மறந்து விட்டது. இக்கால இளைஞர்கள் கடிதம் எழுதும் வழக்கத்தை மறந்து விடக்கூடாது என்பதற்காக அஞ்சல் துறை அதிகாரிகளும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் கடிதம் எழுதும் பழக்கத்தை இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
» மதுரையில் ‘ரோடு ரோலர்’கள் பற்றாக்குறையால் ஜல்லிகளுடன் சாலைகள் - மக்கள் அவதி
» சாத்தூர் பொருட்காட்சி அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு சேலத்தில் 6,600 பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடிதம் எழுதுவதின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக அஞ்சல் தினத்தையொட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 6,600 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதங்களை எழுதினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்தும், கடிதம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சேலம் மாநகராட்சி கவுன்சிலர் ஈசன் இளங்கோ மற்றும் அஞ்சல் துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்து பேசினர். அதன்பின், மாணவர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் மகிழ்ச்சியுடன் கடித்ததை சேர்த்தனர். ஓய்வு நேரங்களில் எப்போதும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், சாட்டிங் என்று இயங்கும் மாணவர்களுக்கு கடிதம் எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்த புதிய அனுபவத்தை சக நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
14 hours ago
கல்வி
14 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
19 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago