மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியர் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை அளிக்கலாம். இத்திட்டம் மூலம் பயன்பெற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவ, மாணவி யருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக தலா ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகையாக மத்திய அரசு வழங்குகிறது. பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை நேரில் அணுகி அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

மேலும், 2023-24-ம் நிதியாண்டுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் அளிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை பரிந்துரை செய்து ஆணையர், ‘பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-05’ என்ற முகவரிக்கு, வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் புதுப்பித்தல் விண்ணப்பங்களையும், 2024 ஜனவரி 15-ம் தேதிக்குள் புதிய விண்ணப்பங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். கூடுதல் விவரங்கள் அறிய 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

20 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்