சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் மறுமதிப்பீடு முடிவு வெளியீடு: செப்.30-ல் உடனடி தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உடனடி தேர்வுகள் வரும் 30-ம் தேதி 3 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை 5 மற்றும் 6-வது செமஸ்டர் தேர்வுகள், முதுகலை, தொழில்சார் படிப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆகியவற்றின் மறுமதிப்பீடு முடிவுகள் இணையதளத்தில் (www.unom.ac.in) நேற்று வெளியிடப்பட்டன.

உடனடி தேர்வுகள் அடையாறு பெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி (பிஎஸ்சி, பிசிஏ) , குமாரராணி மீனா முத்தையா கலை அறிவியல் கல்லூரி (பிகாம், பிபிஏ), ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்ஜிஆர் ஜானகிமகளிர் கலை அறிவியல் கல்லூரி (முதுகலை,தொழில்சார் படிப்புகள், பிஏ, பிஎஸ்டபிள்யு உள்ளிட்டவை) ஆகிய மையங்களில் செப்டம்பர் 30-ம் தேதி காலை 10 மணிமுதல் மதியம்1 மணி வரை நடைபெறும். இதற்கான ஹால்டிக்கெட்டை பல்கலை. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று பதிவாளர் வி.ஏழுமலை கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE