விருத்தாசலம்: தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்புகள் வரை சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 15-ம்தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையக் கட்டிடம் அமைக்கப்பட்டு, அதில் சமையல் பொருட்களை வைத்துக் கொள்ளவும், உணவு சமைக்க எரிவாயு இணைப்புடன் அடுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான எரிவாயு சிலிண்டர் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் சத்துணவு ஊழியர்கள், சத்துணவு மையக் கட்டிடத்துக்கு வெளிப்புறம் திறந்த வெளியில் அடுப்பு மூட்டி, விறகில் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் சமையலுக்கு பயன்படுத்த பள்ளிக்கு வெளியே உள்ள ஊராட்சியின் குடிநீர் குழாயில் இருந்தே தண்ணீர் பிடித்து வந்து சமைக்கின்றனர்.
» இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை என அம்பேத்கர் கருதியது ஏன்? - ஹெச்.வி.ஹண்டே
» 12 மணி நேர வேலைக்கு எதிரான போராட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
இதுதொடர்பாக அங்கிருந்த சத்துணவு ஊழியர்களிடம் கேட்டபோது, “சத்துணவு மையக் கட்டிடத்தின் முன்பகுதிகள் சேதமடைந்துள்ளன. அரிசி மூட்டைகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை அங்கு வைத்துள்ளோம். எரிவாயு அடுப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை சிலிண்டர் வழங்கப்படாததால், மையத்துக்கு வெளியே அடுப்பு மூட்டி விறகில் உணவு சமைத்து வருகிறோம். மழை வந்தால் சற்று சிரமம் தான். வட்டார வளர்ச்சி அலுவலத்தில் முறையிட்டுள்ளோம். அவர்கள் சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சத்துணவு மேலாளர் உமாவிடம் கேட்டபோது, “நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இது தொடர்பாக கூறி, அவர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்வோம்” என்றார்.
சுமார் 400 மாணவர்களுக்கு இங்கு உணவு சமைக்கின்றனர். சத்துணவு விநியோகத்தில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால், மிகக் குறைந்த ஊதியத்தில் கடைநிலையில் பணிபுரியும் சமையலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் வேகம் காட்டும் சத்துணவுப் பிரிவு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்துக்கு வழங்க வேண்டிய சமையல் எரிவாயுவை வழங்கி, கட்டிடத்துக்குள் சமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைச் செய்வதன் மூலமே இங்குள்ள 400 மாணவர்களுக்கும் மழைக் காலத்தில் எந்த இடையூறும் இன்றி சத்துணவு வழங்க இயலும்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
கல்வி
21 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago