சென்னை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலமாக உயர்கல்வி படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணையை என்டிஏ நேற்று வெளியிட்டது.
அதன்படி, இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு, முதல்கட்டமாக ஜன.24 முதல் பிப்.1 வரையும், 2-ம் கட்டமாக ஏப்.1 முதல் 15-ம்தேதி வரையும் நடத்தப்படும்.
அதேபோல், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுமே 5-ம் தேதி நடைபெற உள்ளது.இதுதவிர மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை கலை,அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) மே 15 முதல் 31-ம் தேதிவரையும், முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரையும் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.
மேலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித் தேர்வு (ஜூன் பருவம்) ஜூன் 10 முதல் 21-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும்.
» 23 புதிய சைனிக் பள்ளிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்: தனியார் பங்களிப்புடன் அமைக்க அழைப்பு
» மாணவர் நாடாளுமன்ற தேர்தல்: கோவையில் 2 அரசு பள்ளிகளில் விறுவிறு வாக்குப்பதிவு
கணினிவழி தேர்வுகளுக்கான முடிவுகள் 3 வாரங்களில் வெளியிடப்படும். எழுத்து வடிவிலான நீட் தேர்வு முடிவு ஜூன் 2-வது வாரத்தில் வெளியாகும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
9 hours ago
கல்வி
15 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago