சென்னை: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு இன்று (செப்.20) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன்வெளியிட்ட சுற்றறிக்கை: 1 முதல் 5-ம் வகுப்புக்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு இன்று (செப்.20) தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதில் 1 முதல் 3-ம்வகுப்பு குழந்தைகளுக்கு செல்போன் செயலி மூலமும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து வடிவிலும் தேர்வு நடைபெறும்.
அதன்படி 1, 2, 3-ம் வகுப்பினருக்கு செயலியில் ஒரு பாடத்துக்கு தலா 5 வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். மேலும்,4, 5-ம் வகுப்புக்கான வினாத்தாள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்.
இதுதவிர 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வளரறி மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். இதற்கிடையே முதல் பருவத் தேர்வு நடைபெறுவதால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும்பயிற்சி தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
» திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம் - சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி
» ஒரு வார துப்பாக்கி சண்டை முடிந்தது - லஷ்கர் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
அதன்படி 1 முதல் 3-ம் வகுப்புவரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அக்.4 முதல் 6-ம் தேதிவரையும், 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்.9 முதல்11-ம் தேதி வரையும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும். இந்த தகவலை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
முக்கிய செய்திகள்
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago
கல்வி
10 days ago