உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்கெனதமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பலஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Tamil - எம்ஃபில் தமிழ்), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 2023-24-ம் கல்விஆண்டுக்கான தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கஉள்ளது. இப்பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.4,500. விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில்வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத்தொழில்நுட்பப் பயிலக வளாகம்,தரமணி, சென்னை-600113 என்றமுகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தில் வாட்ஸ்அப் எண் குறிப்பிட வேண்டும். மேலும்தகவலுக்கு 044-22542992 என்றஎண்ணை தொடர்பு கொள்ளலாம்என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE