வேலூர்: தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும், அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், அந்த திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என பல இடங்களில் சுற்றறிக்கையாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும், இ.எம்.ஐ.எஸ்., பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன.
» சந்திரயான்-3 வெற்றி ஒரு மகத்தான அறிவியல் சாதனை: பாகிஸ்தான் புகழாரம்
» வேளாங்கண்ணி பேராலய திருவிழா - சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்
இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்நிலையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக் கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago