யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் வென்றவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: `நான் முதல்வன்' போட்டித்தேர்வு பிரிவு சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், 2023-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, கடந்த மே 28-ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ‘https://www.naanmudhalvan.tn.gov.in’ என்ற இணையதளத்தில் உள்ள அறிவிக்கையைப் பார்த்து, நாளை (ஆக.11) முதல் வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

19 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

21 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்