பிரதம மந்திரி கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 3,094 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமான ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https;//yet.nta.ac.in என்ற இணையளத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

தேசிய தேர்வு முகமையான PM-YASAVI நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆக. 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படும். கணினி வழித் தேர்வு செப்.29ம் தேதி நடைபெறும். இத்திட்டம் தொடர்பான முழு விவரங்கள் https;//yet.nta.ac.in, https;//socialjustice.gov.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

கல்வி

11 days ago

கல்வி

12 days ago

கல்வி

12 days ago

மேலும்