சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்தைதேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (நாக் கமிட்டி) வழங்கியுள்ளது. இதுகுறித்து திறந்தநிலை பல்கலை. பதிவாளர் சு.பாலசுப்ரமணியன் (பொறுப்பு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திறந்தநிலை பல்கலைக்கழகம் 2002-ம் ஆண்டு தமிழக அரசால்நிறுவப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2எப், 12பி தகுதி பெற்றுள்ளது. தற்போது தொலைநிலைக் கல்விமுறையில் படிப்புகளை வழங்கும்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு நாக்கமிட்டி 4-க்கு 3.32 புள்ளிகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஏ பிளஸ்’ தகுதியை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகள், கற்றல் வளம், மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்ட அளவுகோல்களை மையமாக கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் 16 திறந்தநிலை உயர்கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டியின் தரவரிசையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 2-ம் இடத்தில் உள்ளது. பழங்குடியினர், திருநங்கைகள், சிறைவாசிகள், சமூகத்தில் பின்தங்கியோருக்கு உயர்கல்வி வழங்க எடுத்து வரும் முயற்சிகளுக்கும் நாக் கமிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
45 mins ago
கல்வி
5 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago