குரூப்-2 தேர்வு எழுதும் பெண்களுக்கு கட்டண சலுகையுடன் பயிற்சி: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் ஆக.12-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணாநகரில் செயல்பட்டுவரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப்-2 முதல்நிலைத் தேர்வை எழுதும் அனைத்து பெண்தேர்வர்களுக்கும் கட்டணச் சலுகையுடனான 6 மாதகால பயிற்சி வரும் ஆக.12-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிக வரித்துறை அலுவலர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட குரூப்-2 பணியிடங்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இத்தேர்வுக்கு தயாராகும் அனைத்துப் பிரிவு பெண் தேர்வர்களுக்கும் பொதுத் தமிழ் பாடம் உள்ளடக்கிய முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி நடைபெறுகிறது. நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகள் வழங்கப்படும். பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடைபெறும்.

வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் 6 மாதகாலம் நடைபெறும். பெண் தேர்வர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை, அண்ணாநகர் என்ற முகவரியில் தக்க சான்றிதழ் நகல்களுடன் நேரில் வந்து ஆக.9-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE