உதகை அருகே புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி போராட்டம்

By செய்திப்பிரிவு

உதகை: உதகை அருகே கோக்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

பழுதான வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலான நிலையில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள், திறந்த வெளியில் அமர்ந்து படித்து வருகின்றனர். புதிய வகுப்பறை கட்டிடத்தை உடனடியாக கட்டித்தர வலியுறுத்தி மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து பள்ளிக்கு அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அறிந்த உதகை வட்டாட்சியர் சரவணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுமானப் பணிகள் மழைக் காலம் முடிந்ததும் தொடங்கப்படுமென வட்டாட்சியர் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

10 days ago

கல்வி

11 days ago

மேலும்