கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி பள்ளியில் ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 88 மாணவர்கள், 86 மாணவிகள் என 174 பேர் படிக்கின்றனர். இங்குதலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் செண்பகராஜ் உட்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆங்கிலஆசிரியர் உஷா மாற்றுப் பணியாககயத்தாறு அருகேயுள்ள வில்லிசேரிஅரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.உஷாவுக்கு நேற்று முன்தினம் இதற்கானஉத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று வில்லிசேரிஅரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் வேறுபணிக்காக வெளியே சென்றிருந்ததால், மாணவர்களிடம் உதவிதலைமை ஆசிரியர் செண்பகராஜ் மற்றும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் உஷா பணிக்கு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக் கூறி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்தநாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி, உதவி காவல் ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும்போலீஸார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினார்.
வரும் திங்கட்கிழமை அன்று கல்வித்துறை உயர் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் சுமார்ஒன்றரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
கல்வி
5 hours ago
கல்வி
15 hours ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago