கலை, அறிவியல் படிப்புக்கு புதிய பாடத் திட்டம்: அமைச்சர் பொன்முடி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: கலை, அறிவியல் படிப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தொடர்பாக, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் சு.கிருஷ்ணசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ 163 இளநிலை, 135 முதுநிலை என மொத்தம் 298 பாடத் திட்டங்கள் பல்கலை. பாடத்திட்டக் குழுக்களின் ஒப்புதலுடன் நடப்பாண்டு (2023-24) முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் 100 சதவீதம் பாடத் திட்டம் ஒரே வடிவில் இருக்கும். மற்ற பாடங்களில் 75 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கும். மீதமுள்ள 25 சதவீதம் பாடங்களை பல்கலைக்கழகங்கள் தங்களின் பாடவாரியக் குழு மூலம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலை.களின் அதி காரம் பறிக்கப்படவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE