சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.inமற்றும் www.tn medicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று ஜூலை 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய உள்ளதால், விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 22,500, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 9,500 என மொத்தம் 32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, வரும் 16-ம் தேதி தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
» புகார்கள் மீது நடுநிலை நடவடிக்கை: அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
» செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் வருமான வரித் துறையினர் மீண்டும் சோதனை
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago