புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ரத்து

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: நடப்பு கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு புதுச்சேரியில் மட்டும் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து, இந்திய செவிலியர் கவுன்சில் அறிவித்துள்ளது.

செவிலியர் படிப்புக்கு சேர நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரி மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து இந்த கல்வியாண்டில் (2023-24) சென்டாக் மூலம் விலக்கு அளிக்க இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு புதுச்சேரி அரசு தரப்பில் சுகாதார செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.

அதனடிப்படையில் இந்தியன் நர்சிங் கவுன்சில் இந்த 2023-24-ம் கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நடைபெற இருந்த பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை இந்திய செவிலியர் கவுன்சில் சவுர்ஜித் கவுர் அளித்து. அதற்கான கடிதத்தை புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த அனுமதியைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில மாணவர்கள் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குசென்டாக் மூலம் ப்ளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என உறுதியாகிறது‌.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE