கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாகையில் உள்ள டாக்டர்ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை, நடப்புக் கல்விஆண்டுக்கு இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றன.
வேளாண் பல்கலை.யின் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 பட்டயப் படிப்புகள், மீன்வளப் பல்கலை.யின் 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளில் 5,361 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
பெறப்பட்ட 41,434 விண்ணப்பங்களில் 36,612 விண்ணப்பங்கள் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா, மதுரை மாணவர் பி.ஸ்ரீராம், தென்காசி மாணவி எஸ்.முத்துலட்சுமி ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 10,887 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 403 மாணவர்கள்சேர்க்கப்படுவார்கள். இவர்களது கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும்.
தமிழ் வழியிலான வேளாண்மை, தோட்டக்கலைப் பிரிவில் தலா 50 இடங்கள் உள்ளன. இதற்கு 9,997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினருக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி முதல் நடைபெறும். ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். இவ்வாறுஅவர் கூறினார். பதிவாளர் தமிழ்வேந்தன் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
கல்வி
11 hours ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
10 days ago
கல்வி
11 days ago