சென்னை: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் 10-ம் ஆண்டு விழா மற்றும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் அப்துல் காலம் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன், நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், மேற்கு வங்க கூடுதல் தலைமைச் செயலர் ஜி.பாலச்சந்திரன், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மக்களவைச் செயலர் டி.கே.விஸ்வநாதன், முன்னாள் டிஜிபி எஸ்.கே.டோக்ரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் விவேக் ஹரிநாராயண், சிவசைலம், கற்பூர சுந்தரபாண்டியன், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளையும், நினைவுப் பரிசுகளையும், இந்திய குடிமைப்பணி சம்பந்தமான அறிவுரைகளையும் வழங்கினர்.
நிகழ்வில் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோர் உள்ளிட்ட வெற்றியாளர்கள் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழாவுக்கு கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பூமிநாதன் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
கல்வி
22 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago