பிளஸ் 2 துணைத் தேர்வு - தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14-ல் அனுமதி சீட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணைத் தேர்வு, ஜூன், ஜுலை மாதங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) வரும் 14-ம் தேதி பிற்பகல் முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இணையதளத்தில் ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை கிளிக் செய்து, தங்கள் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். துணைத்தேர்வுக்கான காலஅட்டவணையை தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

17 hours ago

கல்வி

15 hours ago

கல்வி

18 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்