முதுநிலை, இளநிலை மருத்துவப் படிப்பு | கலந்தாய்வு வழக்கம்போல் நடைபெறும் - மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வழக்கம்போலவே நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலை படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்துகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.

மத்திய அரசு கலந்தாய்வு: இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும்நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்தியஅரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு ஆன்லைனில் பொது கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக கடந்த மார்ச் 13-ம் தேதி சுற்றறிக்கை மூலம் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

விரைவில் நீட் தேர்வு முடிவு: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்நிலையில், கலந்தாய்வு தொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது போலவே முதுநிலை, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாகவே விண்ணப்பிக்க வேண்டும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

17 hours ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

கல்வி

8 days ago

மேலும்