தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பலவும் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

By என். சன்னாசி

மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், விதிமீறும் நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் பெறவேண்டிய கட்டணத் தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கான அரசாணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களுக்கு எவ்வளவு தொகை வாங்க வேண்டும் என வரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் விண்ணப்ப விலையை அதிகரித்து நிர்ணயித்துப் பெறுவது, கல்விக் கட்டணத்தை அதிகமான பெறுவது என்பது தொடர்கிறது என தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.முரளி, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்கலை மானியக் குழு அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தங்களுக்கான தனி இணையதளங்களை வைத்திருக்க வேண்டும். இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல தகவல்கள், குறிப்பாக ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு கட்டணம் என்பது குறித்தும், மாணவர்கள் குறை தீர்க்கும் குழுக்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என, வழிகாட்டியுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை அறிவியல் , கலை பாடப் பிரிவிற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48, முதுகலை அறிவியல் மற்றும் கலை படிப்பதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.58 என அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சில கல்லூரிகளில் ரூ.200 முதல் ரூ.500 வரைக்கும் விற்கின்றனர். ஒரே விண்ணப்பப் படிவத்தில் சேர விரும்பும் எல்லா பாடங்களுக்கும் விண்ணபிக்கலாம். சில கல்லூரிகளில் தனித்தனி படிவம் வாங்க வலியுறுத்துகின்றனர்.

அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் (டியூசன் பீஸ்) 'இலவசம் என்று 2007ல் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வெவ்வேறு தலைப்பில் ரூ.500 மட்டுமே கட்ட வேண்டிய இடத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் விதி மீறல்கள் நடக்கிறது. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், கல்லூரி நிர்வாகங்கள் விதிக்கும் கட்டணத்தையும் சிரமப்பட்டு செலுத்துகின்றனர். குறைந்த கட்டணத்தொகையில் தரமான உயர் கல்வியை வழங்க அரசு ஆணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு இதற்கான வழிகாட்டுதல் கொடுத்தும் விதிமீறல்களை செய்து ஏழை மாணவர்கள், பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது முதல்வர், உயர் கல்விமைச்சர் ,உயர் கல்வித் துறை அதிகாரிகள், துணைவேந்தர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் ஏற்பாடு செய்யவேண்டும். கல்லூரிகள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களுக்கு உரிய ரசீது வழங்கவேண்டும்.

இணையதளம் மூலமாக சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சில கல்லூரிகள் வலியுறுத்துவதை தடை செய்யவேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகவும் சிரமமாக அமையும். இணைய வழி விண்ணப்பம் என்பது விருப்பப்படுவோருக்கான வசதியாக இருக்கலாம். அதுவே கட்டாயமாக்ககூடாது. அதிகக் கட்டணம் வசூலிப்பதை கண்டறிந்து தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

34 mins ago

கல்வி

4 hours ago

கல்வி

20 hours ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

மேலும்