அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்க ளுக்கு இலவசமாக வழங்கப்படும் புத்தகங்களை அரசுப் பள்ளிகளில் நேரடியாக வழங்க உத்தரவிட்டாலும், வட்டார கல்வி அலுவலகம் வந்து வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள் என 'இந்து தமிழ் திசை ' உங்கள் குரல் பகுதியில் ஆசிரியர் வாசகர்கள் பதிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக சீறுடை, பாடப்புத்தகம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,792 பள்ளிகளில் பயிலும் 3,18,091 மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டன. இதனை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பப்படும் பாடப் புத்தகங்களை வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். இதற்காக அரசு வட்டாரத்திற்கு தலா ரூ.32 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்கிடையே சில வட்டார கல்வி அலுவலர்கள் தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொண்ட வாட்ஸ்அப் குழுவில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் நேரில் வந்து நோட்டு புத்தகங்களை பெற்றுச்செல்ல வேண்டும் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தனர்.
» பிரதமர் மோடி படம் இருப்பதால் 250 கால்நடை ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தில் முடக்கம் - அண்ணாமலை கண்டனம்
» மேகேதாட்டு அணைக்கு எதிராக டெல்லி சென்று போராட தயார் - விவசாய சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தகவல்
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, “வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு நேரடியாக புத்தகங்கள், குறிப்பேடுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் பெற பணம் கேட்பது, பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்க பணம் கேட்பது குறித்து விழுப்புரம் மாவட்ட பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, “கடந்த காலங்களில் பாடப் புத்தகங்கள், நோட்டுகளை எங்களுக்கு வட்டார கல்வி அலுவலகம் வழங்குவதில்லை. நாங்களே சென்று எங்கள் செலவில் கொண்டு வருகிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் இதே நிலைதான் உள்ளது. ஆண்டுக்கு 3 பருவத்திற்கும் இப்படி சுமார் ரூ.6 ஆயிரம் செலவழிக்கிறோம். தற்போது பள்ளிக்கே கொண்டு வந்து தருகிறார்கள். அடுத்த பருவத்திற்கு என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் இதே நிலைதான் உள்ளது. ஆண்டுக்கு 3 பருவத்திற்கும் இப்படி சுமார் ரூ.6 ஆயிரம் செலவழிக்கிறோம்.
முக்கிய செய்திகள்
கல்வி
15 hours ago
கல்வி
22 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago