நவம்பர் 9. வியாழக்கிழமை காலை ஊடகங்களில் வெளியான முதல் தெறிப்புச் செய்தியே, "ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடு, நிறுவனங்களில் ரெய்டு. இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்" என்பதுதான். ஒட்டுமொத்த ஊடக கண்காணிப்பும் தினகரன் வீட்டுப்பக்கம் திரும்ப அவரோ மனைவி, மகளுடன் மிக இயல்பாக கோ பூஜையில் ஈடுபட்டுவந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்த டிடிவி தினகரன், இதற்கு முன் இல்லாத அளவுக்கு மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார்.
"வருமான வரித்துறை சுதந்திரமாக இயங்கும் அமைப்பு என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். சசிகலாவும், நானும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் எங்களை ஒழித்துக்கட்டவுமே இந்த ரெய்டு. வருமான வரி சோதனைகளுக்கு நான் அஞ்சிவிட மாட்டேன். மத்திய அரசு என்னை சிறையில் தள்ளட்டும். சிறையில் இருந்து வெளிவந்து அரசியலில் ஈடுபட்டு தகுந்த பதிலடி கொடுப்பேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்ததற்கெல்லாம் ரெய்டு நடத்துவார்கள் என்றால் மீண்டும் கூறுகிறேன் அது தோல்வித் திட்டமே. 30 வயதிலேயே சிறையை சந்தித்தவன். மக்கள் மத்தியில் எங்களுக்கே ஆதரவு இருக்கிறது. இரட்டை இலை கிடைத்தாலும்கூட மக்கள் எடப்பாடி அரசை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழக அரசை மக்கள் வெறுக்கின்றனர்" என்றெல்லாம் தினகரன் பேசினார்.
ஒருபுறம், கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்து நெருக்கடி அளிக்கப்படுகிறது. மறுபுறம் வருமான வரித் துறை சோதனைகள், இரட்டை இலை சின்ன வழக்கு, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு என தேசிய அளவில் நெருக்கடிகள் இருக்கின்றன.
இந்நிலையில், கட்சிப் பொதுக்கூட்டங்களுக்கு அமோக வரவேற்பு, ஊடகப் பேட்டிகளுக்கு சளைக்காமல் பதில் சொல்வது, எதையும் எழுதிவைத்து வாசிக்காமல் கோர்வையாகப் பேசுவது என்ற தினகரனின் போக்கு தமிழக அரசியலில் அவருக்கு எத்தகைய வரவேற்பை ஏற்படுத்தித் தரும்?
ஊழலை ஒழிக்க வேண்டும், சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் போன்ற கமல், ரஜினி அரசியல் முன்னோட்டங்களோடு ஒப்பிடும்போது அரசியல் அரங்கில் தினகரனுக்கான வாய்ப்பு எப்படி? சிறைக்கு அனுப்பினாலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அரசியல் செய்வேன் எனும் தினகரனுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் வரவேற்பு எப்படி இருக்கும்? கெடுபிடிகளில், நெருக்கடிகளில் ஓரங்கட்டப்படுவாரா? இல்லை, அவர் சொல்வதைப் போலவே வழக்குகளை மீறியும் தடம் பதிப்பாரா? விவாதிக்கலாம்.
முக்கிய செய்திகள்
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
4 years ago
விவாதக் களம்
5 years ago
விவாதக் களம்
5 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
7 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
11 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
10 years ago
விவாதக் களம்
11 years ago