விவாதக்களம்: லேடி சூப்பர்ஸ்டார் ஆவாரா நயன்தாரா?

By செய்திப்பிரிவு

'அறம்' திரைப்படம் அதிகம் பேசப்பட நயன்தாராவின் கம்பீர நடிப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. ஆரம்ப காலத்தில் நயன்தாராவும் டூயட் காட்சிகளுக்கான சராசரி ஹீரோயினாக இருந்தார். பின்நாளில், அவர் தனக்கான கதையை தேர்வு செய்ததில் காட்டிய அக்கறை அவரை தென்னிந்திய சினிமாவின் ஒளிரும் நட்சத்திரமாக உருவாக்கியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் ஆக ரசிகர்களால் வர்ணிக்கப்படவர் நடிகை விஜயசாந்தி. அவருக்குப் பின் அத்தகைய வரம்புக்குள் வைத்து எந்த நடிகையையும் ரசிகர்கள் போற்றியதில்லை. நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டும்வரை ரசிகர்கள் சென்றனர். இருப்பினும், விஜயசாந்தி எல்லையை குஷ்பு நெருங்கவில்லை.

தற்போது, விஜயசாந்திக்கு நிகரான இடத்தை ரசிகர்கள் நெஞ்சங்களில் நயன்தாரா நிறுவியிருக்கிறார்.

தெலுங்கில் வெளியான 'ராமராஜ்யமே' கடைசித் திரைப்படம் என நயன்தாராவே அறிவித்த நிலையில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் சர்ச்சையாக்கப்பட்டபோதும்கூட உடைந்துவிடாது உறுதியாக நின்றவர் நயன்தாரா. சட்டென்று தன் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் திரைக்கு வந்தபின்னர் களத்தில் அவர் தன்னை மென்மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியான 'ராஜாராணி' திரைப்படம் நயன்தாரா ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து 'மாயா', 'நானும் ரவுடிதான்' 'டோரா' போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தன. நாயகிகளை பிரதானப்படுத்தும் கதைகளில் அவர் நடிப்பது பெண் ரசிகைகளையும் அவர்பக்கம் ஈர்த்துள்ளது.

தற்போது, அவர் நடிப்பில் வெளியான 'அறம்' படம் மக்கள் மனங்களில் நயன்தாராவை இன்னும் மேலே உயர்த்திப் பிடித்துள்ளது.

சினிமா துறையில், ஒரு கதாநாயகருக்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்குமோ அதே அளவிலான வரவேற்பு நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக, இப்படத்தில் நடிக்க இயக்குநர் கோபி நயினாருக்காக நயன்தாரா ஒப்புக்கொண்டதாக பேசப்படுவது சமூகத்தில் அவருக்கான அந்தஸ்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.

சமூகவலைதளங்களில் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டாராக மக்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்பதற்கு விடை தெரியா வேளையில் தமிழகத்தின் லேடி சூப்பர்ஸ்டார் ஆவாரா நயன்தாரா? வாருங்கள் விவாதிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விவாதக் களம்

4 years ago

விவாதக் களம்

4 years ago

விவாதக் களம்

4 years ago

விவாதக் களம்

5 years ago

விவாதக் களம்

7 years ago

விவாதக் களம்

7 years ago

விவாதக் களம்

7 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

விவாதக் களம்

10 years ago

மேலும்