சென்னை: பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்தி திருவான்மியூரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்த கணவன், மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 2005-ம் ஆண்டு அருணா வெங்கட்ராமன் என்பவருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அருணா வெங்கட்ராமன், தனது நண்பரான மந்தைவெளியை சேர்ந்த சவுந்தரராஜன்பெயரில் பொது அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்கான முன் பணத்தைகல்யாண சுந்தரராமன், அருணாவெங்கட்ராமனுக்கு கொடுத்தார்.
பொது அதிகார பத்திரத்தை தவறாக பயன்படுத்திய சவுந்தரராஜன், அந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் பெயருக்கு பதிவு செய்து கொடுப்பதற்கு பதிலாக தனது மனைவி கல்பகம் பெயரில் மோசடியாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக கல்யாணசுந்தரராமன் அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து, சவுந்தரராஜன், அவரது மனைவி கற்பகம் ஆகியோர் மீதுமோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ராஜேஷ் ராஜூ, குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இருவருக்கும் தலா3 ஆண்டுகள் சிறை தண்டனைமற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். கல்யாண சுந்தரராமனுக்கு நஷ்டஈடாக ரூ.1.09 கோடியை 3 மாதகாலத்தில் வழங்கவும் சவுந்தரராஜனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago