வேலூர்: வேலூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் காதில் புளூடூத் அணிந்து முறைகேடு செய்த நபரை காட்பாடி காவல் துறையினர் நேற்று கைது செய்து பிணையில் விடுவித்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வுகள் நடை பெற்றன. இதில், விருதம்பட்டு அப்துல் ரகுமான் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹபீஷ் என்ப வரின் மகன் அப்துல் பயாஸ் (27) என்பவர் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினார்.
அப்போது, அவரது வலது காதில் பேண்டேஜ் ஒட்டிருந்தார். இதுகுறித்து அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தேர்வு கண்காணிப்பாளர் சரளா கேட்டபோது, காதில் ஏற்பட்ட காயத்துக்காக பேண்டேஜ் ஒட்டியிருப்பதாக அவர் கூறினார். இந்நிலையில், சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் தனியாக யாருடனோ பேசுவதை உணர்ந்த தேர்வு கண்காணிப்பாளர் சரளா, சந்தேகத்தின் பேரில் அப்துல் பயாஸ் காதில் ஒட்டியிருந்த பேண்டேஜை அகற்றுமாறு கூறியுள்ளார்.
» ‘நான் அதிர்ஷ்டசாலி’ - அம்பதி ராயுடு
» ‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’, தோனியிடம் தோற்பதில் கவலை இல்லை - ஹர்திக் பாண்டியா
பேண்டேஜை அகற்றிய போது அப்துல் பயாஸ் தனது காதில் புளூடூத் பொருத்தி அதன் மூலமாக வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து கேள்விக்கான விடை களை கேட்டு தேர்வு எழுதிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அப்துல் பயாஸ் மீது காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அப்துல்பயாஸ் தலைமறைவானார். அவரை, காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விருதம்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த அப்துல் பயாஸை காவல் துறையினர் நேற்று கைது செய்து பிறகு, அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago