டெல்லியில் இளம்பெண் குத்திக்கொலை: காதலன் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி தெருவில் நடந்து சென்ற 16 வயது இளம்பெண்ணை கத்தியால் 22 முறை குத்திக் கொலை செய்த காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். வடக்கு டெல்லியிலுள்ள ரோஹிணி அருகேஷாபாத் பகுதியிலுள்ள ஒரு தெருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு இளம்பெண் நடந்து சென்றார்.

அப்போது அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். 22 முறை கத்தியால் குத்திய பின்னர் கத்தி அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து, அங்கிருந்த சிமெண்ட் பலகையை எடுத்து அவர் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி, கொலையாளியைத் தேடி வந்தனர். விசாரணையில் அவர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷெகரைச் சேர்ந்த சாஹில் (20) என்பது தெரியவந்தது. ஏ.சி. மெக்கானிக்கான அவர், அந்த இளம்பெண்ணின் காதலர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாஹிலை கைது செய்தனர்.

இதனிடையே இந்த படுகொலை சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “டெல்லியில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதே நேரத்தில் மிகவும் துரதிருஷ்டவசமானது. கிரிமினல்கள் இப்போது பயம் இல்லாதவர்களாக மாறிவிட்டனர். போலீஸாரைக் கண்டு அவர்கள் பயப்படுவதே இல்லை. டெல்லி துணை நிலை ஆளுநர் அவர்களே... சட்டம் - ஒழுங்கு உங்கள் பொறுப்பில் உள்ளது. தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்” என்றார்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்