மணல் கடத்தலை தடுக்க முயன்ற 2 போலீஸார் மீது வாகனத்தை மோதி கொல்ல முயற்சி - உரிமையாளர் கைது; ஓட்டுநர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள காட்டாற்றில் அதிகளவில் மணல் திருட்டு நடப்பதாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு காவலர்கள் சரவணன், சதீஸ்குமார் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பட்டுக்கோட்டை அருகே கார்காவயல் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு அதிவேகமாக வந்த சுமை ஆட்டோவை ஆய்வு செய்வதற்காக காவலர்கள் சரவணன், சதீஸ்குமார் ஆகியோர் தடுத்தனர். ஆனால், சுமை ஆட்டோவில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல், 2 போலீஸார் மீதும் மோதிவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர். இதில், சரவணன், சதீஸ்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து, கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், போலீஸார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சுமை ஆட்டோவின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(31) என்பது தெரியவந்தது.

ராஜாவை போலீஸார் கைது செய்து, சுமை ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் நிசாந்தை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

15 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்