சென்னை | கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணம் திருடிய பெண் சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை, பணம் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த ஆவடி, 24-வது விரிவாக்கம், வெற்றி நகர் மெயின் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (30). இவர், தனது குழந்தையுடன் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஒரு துணிக்கடைக்குச் சென்று, துணிகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கூட்ட நெரிசலில் அவரது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை யாரோ பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ரேவதி புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சம்பவம் நடைபெற்ற துணிக்கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், பெண் ஒருவர் துணிக்கடையில் ஆடைகளை வாங்குவது போல நடித்து, ரேவதியின் குழந்தையின் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை திருடிச் சென்றது தெரிந்தது.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தபுஎன்ற தபர்சம்பானு (37) எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த தபுவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கைதான தபு ஏற்கெனவே தி.நகர் பகுதியில் உள்ள துணிக்கடைகளில் ஆடைகள் வாங்குவதுபோல நடித்து, குழந்தைகளின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கைப்பையில் இருக்கும் பணத்தைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்