மானாமதுரை: மானாமதுரை அருகே கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தந்தையை கொலை செய்த மகன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலைச் சேர்ந்தவர் உதயக்கண்ணன் (53). ஒரு மாதத்துக்கு முன்பு அவரை காணவில்லைஎன அவரது மகள் தாரணி மானாமதுரை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று காலை மானாமதுரை அருகேயுள்ள வேலூர் விலக்கு பகுதியில் சிவகங்கை சாலையோரத்தில் உடலில் காயங்களுடன் உதயக்கண்ணன் இறந்து கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.
இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் விசாரித்தனர். இதில் உதயக்கண்ணனை அவரது 17 வயது மகன் மற்றும் நண்பர்கள் லாடனேந்தலைச் சேர்ந்த சூரியபிரசாந்த் (19), மணிகண்டன் (19) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலைக்கு உதயக்கண்ணனின் மனைவி புஷ்பலதா (42), மகள் தாரணி (22) ஆகியோரும் உதவியாக இருந்துள்ளனர். இதையடுத்து போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: உதயக்கண்ணனுக்கு அதிகளவில் கடன் இருந்தது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் உதயக் கண்ணன் ஒரு மாதத்துக்கு முன்பு தலைமறைவானார். இந்நிலையில் அவரை கொலை செய்து விட்டால், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொல்லை தர மாட்டார்கள் என அவரது மகன் கருதியுள்ளார்.
» தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
» சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை
இதனால் தலைமறைவாக இருந்த உதயக்கண்ணனை, வேலூர் பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். மேலும் அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளை சாய்த்து வைத்து விபத்தில் இறந்ததுபோல் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இறந்த விதத்தை பார்த்தபோது கொலை என்பது தெரியவந்தது.
இந்த கொலைக்கு உதயக்கண்ணனின் மனைவி, மகளும் உடந்தையாக இருந்துள்ளனர். உதயக்கண்ணனின் மகன் தனது நண்பர்களுடன் ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன்பு மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியில் ஒரு வீட்டுக்குள் புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண்ணிடம் நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
35 mins ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
14 days ago