பந்தலூர்: பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் அதிகாலையில் இரண்டு பேர் மதுபானங்களை திருடிக்கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது..
தகவலறிந்து சம்பவ இடதத்துக்கு விரைந்த போலீஸார் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது கத்தியால் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, போலீஸார் தற்காப்புக்காக காலில் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை பிடித்துள்ளனர். சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இரண்டு காவலர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பிச் சென்ற மற்றொரு கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அதிகாலையில் நிகழ்ந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago