சென்னை | 359 கிராம் நகை, விலையுயர்ந்த 10 செல்போனுடன் ஊழியர் மாயம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அசோக்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் அகமது(19). இவரது தந்தை சாகுல் அமீது. இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லமுனா மரைக்காயர்(28) என்பவர் சிறு வயதிலிருந்தே சாகுல் அமீதுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு நின்ற லமுனா மரைக்காயர், மீண்டும் சாகுல் அமீதுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாகுல் அமீது, 359 கிராம் நகைகள் மற்றும் 10 ஐபோன்களை லமுனா மரைக்காயரிடம் கொடுத்து பர்மா பஜாரில் உள்ள கடையில் கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.

லமுனா மரைக்காயர், பர்மா பஜார் செல்லாமல், கீழ் தளத்தில் தான் தங்கியிருந்த அறையில் அந்த பையை வைத்துவிட்டு, நகை மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முஸ்தாக் அகமது அசோக் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் லமுனா மரக்காயரைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE