தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் ராஜா ராபர்ட்,ரேணுகா ஆகியோர் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் தனித்தனியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இரு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிராஜா (27) என்பவரையும், பொன்னன் குறிச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (27) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 21 சாக்கு மூட்டை ஆற்று மணல்பறிமுதல் செய்யப்பட்டது. இதில் இசக்கிராஜா மீது ஏற்கெனவே வைகுண்டம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கருப்பசாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் போலீஸார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago