சென்னை: சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 54 டிக்கெட் மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (23.05.2023) சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
அதன்பேரில், டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 22.05.2023 அன்று 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 32 டிக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.5,300/- பறிமுதல் செய்யப்பட்டது
தொடர்ந்து டி-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று (23.05.2023) தீவிரமாக கண்காணித்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக, 9 வழக்குகள் பதிவு செய்து 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, 22 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.6,000/- பறிமுதல் செய்தனர்.
2 நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்து, 20 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 54 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.11,300/- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட மொத்தம் 20 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago