கீழ்ப்பாக்கத்தில் இளைஞர் கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கர்ணா (26). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 5 பேர் கும்பல் திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்து விட்டு தப்பியது.

தகவல் அறிந்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையபோலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கினர். இதில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை அயனாவரம், புதுநகரைச் சேர்ந்த அர்ஜூன் (23) தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது.

முதல் கட்டமாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கடந்த 7 மாதங்களுக்குமுன்னர் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பழி வாங்குவதற்காக இக்கொலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்