சென்னை | நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை: 4 பேரை கைது செய்தது தனிப்படை

By செய்திப்பிரிவு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய்என்ற பம்பு அஜய் (23). போலீஸாரின் ரவுடி பட்டியலில் இருந்தஇவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட சுமார் 15 குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவுபுதுவண்ணாரப்பேட்டை சுனாமிகுடியிருப்பு பகுதியில், நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்தஅஜய், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி குத்திவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால், கோபம் அடைந்த நண்பர்கள், அந்த கத்தியை பிடுங்கி அவரையே சரமாரியாகக் குத்திவிட்டு தப்பினர். அஜய்யின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.

உடனடியாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அஜய்யைமீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜய் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவான கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். முதல்கட்டமாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

47 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்