துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோது ஆதம்பாக்கத்தில் ரவுடி கொலை: 10 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரவுடியான இவர்மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்நிலையில் சீனிவாசன் தனதுவீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றார்.

அப்போது, ஒரு ஆட்டோ, 4 இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல்ஒன்று சீனிவாசனை சரமாரியாகஅரிவாளால் வெட்டியது. இதைப் பார்த்துஅங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். ஆனால்,சீனிவாசனின் 17 வயது, 15 வயதுடைய மகன்கள்தந்தையைக் காப்பாற்றுவதற்காக அந்த கும்பலைத் தடுக்க முயன்றனர். ஆனால் அந்தநபர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர்.

இதற்கிடையே அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சீனவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பியது.

தகவல் அறிந்து ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சீனிவாசன் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல காயமடைந்த அவரது 2 மகன்களும் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொலை குறித்து போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த சீனிவாசன், 2014-ம் ஆண்டு ஒரு கொலைவழக்கிலும், 2021-ம் ஆண்டு ஆதம்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடியான நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்குச் சென்றுவந்தவர். கொலைக்கு இந்த முன் விரோதம் காரணமா என விசாரிக்கிறோம்'' என்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன் (28), ஆலந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (27) உள்ளிட்ட 10 பேரை போலீஸார் நேற்றுஇரவு கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைநடக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் வீரமணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

14 days ago

மேலும்